உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி..!
இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றைய தினம் தொடங்கவிருந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்றைய முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலேயே இருந்து நிதானமாக விளையாடி வந்த இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 68 பந்தில் 4 பவுண்டரி 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதைத் தொடர்ந்து, சுப்மான் கில் 28 ரன்னில் வெளியேற, பின்னர், இறங்கிய புஜாரா 54 பந்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறினார். தற்போது களத்தில் விராட் கோலி, ரஹானே இருவரும் விளையாடி வருகின்றனர். விராட்கோலி 27, ரஹானே 8 ரன்களுடன் விளையாடி வருகின்றன.
இந்திய அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்து உள்ளனர்.