“கொரோனா பரவலுக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும்”- ஐசிசி!
கொரோனா பரவலுக்கும் மத்தியில் நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள், தீவிரமாக விளையாடியது. இதில் முதலில் நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தேர்வானது. அதனைதொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்கு தேர்வானது.
நியூஸிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த இறுதிப்போட்டி, ஜூன் 18 முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்தம்டன் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வருவோருக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை எப்படி பாதுகாப்புடனும், வெற்றிகரமாகவும் நடத்துவது என்பதை இங்கிலாந்து, இந்தியா உட்பட சில கிரிக்கெட் வாரியம் செய்து காட்டியுள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என்றும், இதுக்குறித்து இங்கிலாந்து அரசிடம் ஆலோசித்து வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.