நாளை தொடங்குகிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்… இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்.!

IndvsAus Final

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவலில் நடைபெறுகிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஐசிசியின்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கி ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

INDvsAUS wtc 23
INDvsAUS wtc 23 [Image-ICC]

2021-23 காலகட்டத்திற்குள் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா(152 புள்ளிகளுடன்-66.67%) மற்றும் இந்தியா(127 புள்ளிகளுடன்-58.8%) ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

NZ 21
NZ 21 [Image- ICC]

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா அடைந்த தோல்விக்கு, பதிலடியாக இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இந்தியா மிகத்தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது.

இதே நேரத்தில் கடந்த முறை டெஸ்ட் உலகக்கோப்பை பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்ட ஆஸ்திரேலியாவும், இம்முறை முதல் அணியாக தகுதி பெற்றுள்ளதால் டெஸ்ட் உலகக்கோப்பை மேஸ்(Mace) ஐ வெல்லும் நோக்கத்தில் தயார் ஆகிவருகின்றனர்.

பரிசுத்தொகை எவ்வளவு:

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு $1.6 million (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13.20கோடி)யும், தோல்வியுறும் அணிக்கு $800,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.61கோடி)யும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICC mace
ICC mace [Image- ICC]

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23ல் பங்கேற்ற மற்ற ஒன்பது அணிகளுக்கும் மொத்தமாக 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.31.35கோடி) பகிர்ந்து அளிக்கப்படும்.

மழை வந்தால்?

இறுதிப்போட்டியில் போது மழை வந்து ஆட்டம் தடை பட்டால், கூடுதலாக ஒருநாள் வழங்கப்படும். போட்டி குறிப்பிட்ட 5 நாட்களில் விளையாடமுடியாமல் போகும் பட்சத்தில், அதனை ஈடு செய்ய ஜூன் 12 ஆம் தேதி ரிசர்வ் டே வழங்கப்படும்.

ReserveDay
ReserveDay [Image- ICC]

ஒருவேளை ஆட்டம் சமனில் முடிந்தாலோ, ஆட்டமே நடைபெறாமல் தடை பட்டாலோ இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டு அணிகளும் சேர்ந்து கோப்பையை பகிர்ந்து கொண்டதாக அறிவிக்கப்படும்.

இந்தியா எப்படி…

இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. ரோஹித், கோலி, புஜாரா, ரஹானே, கில் ஆகியோர் பேட்டிங்கிலும், ஷமி, சிராஜ், ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சிலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக இருக்கின்றனர். விராட் தற்போது நல்ல பார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

IndTeam
IndTeam [Image- AFP]

ஆடுகளத்தின் சாதகத்தை பொறுத்து இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடுமா அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என்பது நாளை தெளிவாகும். ஷமி பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தினால் மற்ற பவுலர்களுக்கு அது கூடுதல் சுமையை இறக்காது.

ஆஸ்திரேலியா மிரட்டுமா…

இங்கிலாந்து மைதானங்களில் அதிகம் பரிட்சையமுள்ள ஆஸ்திரேலிய அணியின் கை இதில் ஓங்கி இருக்கிறது. ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் லியோன் ஆகியோர் பவுலிங்கில் இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் ஸ்மித், லபுஸ்சன், வார்னர், க்வாஜா ஆகியோர் ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.

AusTeam
AusTeam [Image- Twitter/@ICC]

இந்திய அணி(முழு விவரம்):

ரோகித் சர்மா (C), ரவிச்சந்திரன் அஷ்வின், கே.எஸ்.பரத், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, இஷான் கிஷன், சேதேஷ்வர் புஜாரா, அக்சர் படேல், அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனடக்ட், உமேஷ் யாதவ்.
ரிசர்வ் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
ஆஸ்திரேலிய அணி(முழு விவரம்):
பேட் கம்மின்ஸ் (C), ஸ்காட் போலன்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், டாட் மர்பி, மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.
ரிசர்வ் வீரர்கள்: மிட்ச் மார்ஷ், மாட் ரென்ஷா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining
Annamalai - Edappadi palanisamy