டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த உலக சாதனை.!

Default Image

பிஎஸ்எல் லீக் தொடர், டி-20 போட்டியில் 515 ரன்கள் குவிக்கப்பட்டு உலகசாதனை படைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடந்துவரும் பிஎஸ்எல் டி-20 கிரிக்கெட் லீக்2023 தொடரில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் இடையேயான போட்டியில் ஒட்டுமொத்தமாக 515 ரன்கள் குவிக்கப்பட்டது. இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபரில் தென்னாப்பிரிக்காவில் நடந்த சிஎஸ்ஏ டி-20 சேலஞ்ச் போட்டியில் டைட்டன்ஸ்-நைட்ஸ் அணிகளுக்கிடையே 501 ரன்கள் குவிக்கப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது.

அந்த சாதனை தற்போது பிஎஸ்எல் டி-20 கிரிக்கெட் லீக்2023 தொடரில் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் இடையேயான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்கள், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 262/3 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக அந்த அணியில் உஸ்மான் 43 பந்துகளில் 12 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உட்பட 120 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் பிஎஸ்எல் வரலாற்றில் 36 பந்துகளில் சதமடித்து மற்றுமொரு மைல்கல் சாதனை படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டி-20யில் ஒரு போட்டியில் மொத்தமாக 515 ரன்கள் குவிக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer