ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பவுலர்! முகமது சிராஜ் அசத்தல்.!

Default Image

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ், முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி சமீபத்தில் ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களின் வரிசையில் இந்தியாவின் முகமது சிராஜ் முதன்முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். முகமது சிராஜ், கடந்த ஒருவருடமாக 50 ஓவர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சளர்களில் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடைவெளி இருந்த சமயத்தில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் சிராஜ் மிரட்டி வருகிறார். வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என அனைத்தையும் சிறப்பாக கையாண்டு எதிரணிக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்.

28 வயதான சிராஜ் 20 போட்டிகளில் 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், மேலும் அவர் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்றவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்