உலக கோப்பையில் மோதும் இந்தியா-பாகிஸ்தான்!! பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது !!கிளம்பியது எதிர்ப்பு

Default Image

பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வருகிறது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  மே மாதம் நடைபெற உள்ளது.இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா அமைப்பு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
hmpv virus in india
power cut image
Legislative Assembly Session
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly