உலக்கோப்பை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் இயான் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் இயான் மோர்கன். அயர்லாந்து நாட்டில் பிறந்த இயான் மோர்கன், 2009 ஏப்ரல் வரை அந்நாட்டு அணிக்காக விளையாடி வந்தார். 2009 முதல் கடந்த 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
16 டெஸ்ட் போட்டிகளில் 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 7,701 ரன்களும் எடுத்துள்ளார் இயான் மோர்கன். இதுபோன்று, 115 டி20 போட்டிகள் விளையாடியுள்ள மோர்கன் 10,159 ரன்கள் எடுத்துள்ளார். மோர்கன் 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அவர்களின் முதல் ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெறுவதற்கு வழிநடத்தினார் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.
126 ஒரு நாள் போட்டிகள், 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 118 வெற்றிகளை அணிக்கு பெற்று தந்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த SA20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக மோர்கன் கடைசியாக விளையாடிய அவர், 128 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், தனது 36 ஆவது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…