ஓய்வை அறிவித்தார் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன்!

Default Image

உலக்கோப்பை வென்ற இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் இயான் மோர்கன் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டவர் இயான் மோர்கன். அயர்லாந்து நாட்டில் பிறந்த இயான் மோர்கன், 2009 ஏப்ரல் வரை அந்நாட்டு அணிக்காக விளையாடி வந்தார். 2009 முதல் கடந்த 2022 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

em

16 டெஸ்ட் போட்டிகளில் 700 ரன்களும், 248 ஒருநாள் போட்டிகளில் 7,701 ரன்களும் எடுத்துள்ளார் இயான் மோர்கன். இதுபோன்று, 115 டி20 போட்டிகள் விளையாடியுள்ள மோர்கன் 10,159 ரன்கள் எடுத்துள்ளார். மோர்கன் 2019 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை அவர்களின் முதல் ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் பெறுவதற்கு வழிநடத்தினார் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது சர்வதேச ஓய்வை அறிவித்தார்.

emtoday

126 ஒரு நாள் போட்டிகள், 72 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 118 வெற்றிகளை அணிக்கு பெற்று தந்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த SA20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக மோர்கன் கடைசியாக  விளையாடிய அவர், 128 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், தனது 36 ஆவது வயதில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்