13வது ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதற்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. 50 ஓவர்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டத்தில், அணியில் இடம்பெற்றுள்ள 15 பேரும் மாறி மாறி பேட்டிங், பீல்டிங் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நேற்று 3 அணிகள் மோதுகின்றன. இதில், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த பயிற்சி போட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. உலகக்கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி போட்டியில்
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அதன்படி, பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. இதில், கேப்டன் பாபர் அசாம் 80 ரன்கள், முகமது ரிஸ்வான் 103 ரன்கள் அடித்து சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர். இதன்பிறகு சவுது ஷகீல் அதிரடியாக 53 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார். ஆகா சல்மான் 33, ஷதாப் கான் 16 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து, 346 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, சிறப்பாக விளையாடி 43.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 97 ரன்கள் சேர்த்தார். இதுபோன்று, கவுகாத்தியில் நடைபெற்ற மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை அணியும், வங்கதேசம் அணியும் மோதுகின்றன.
இதில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பங்களாதேஷ் அணி 42 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதேபோல், திருவனந்தபுரத்தில் நடக்கவிருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்றைய பயிற்சி ஆட்டங்களில், கவுகாத்தியில் இந்தியாவை எதிர்கொள்கிறது இங்கிலாந்து. மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் திருவனந்தபுரத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது நெதர்லாந்து.
அதன்படி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறும் 4வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். இப்போட்டியின் மூலம் இந்திய வீரர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமையும். எனவே, இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும். இதனிடையே, முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை தொடர் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
2023 உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகள் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது,டாஸ் மதியம் 1.30 மணிக்கு போடப்படும். உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் காணலாம். மொபைல் அல்லது லேப்டாப்பில் பயிற்சிப் போட்டிகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் app அல்லது இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் உள்ளனர்.
நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (c), மேக்ஸ் ஓ’டவுட், பாஸ் டி லீட், விக்ரம் சிங், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், ரியான் க்ளீன், வெஸ்லி பர்ரேசி, சாகிப் சுல்பிகார், ஷரிஸ் அஹ்மத், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் ஆகியோர் உள்ளனர்.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…