உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு -விவரங்கள் இதோ..!

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிவிப்பின்படி, டெல்லியில் இருந்து ஒன்று மற்றும் மும்பையில் இருந்து மூன்று ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அகமதாபாத்தை சென்றடையும் என கூறப்படுகிறத.

சிறப்பு ரயில் முன்பதிவு:

போட்டி முடிந்ததும் ரயில்கள் திங்கள்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகமதாபாத்திற்கு செல்ல 20,000 முதல் 40,000 வரை விமானக் கட்டணங்கள் விற்கப்படுகின்றனர் ரயில்வேயின் இந்த முயற்சி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களில் ஸ்லீப்பர் இருக்கைக்கு ரூ.620 முதலும், ஏசி இருக்கைக்கு ரூ 3,490வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள்  ஐஆர்சிடிசி இணையதளம்  www.irctc.co.in மூலம் முன்பதிவு செய்யலாம்.

சிறப்பு விரைவு ரயில்:

ரயில் எண் 01153 சிறப்பு விரைவு ரயில் இன்று இரவு 10.30 மணிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 06.40 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். ரயில் எண் 01154  சிறப்பு விரைவு ரயில் திங்கள்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 10.35 மணிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வந்தடையும்.

மும்பையிலிருந்து செல்லும் ரயில்கள்  தாதர், தானே, வசாய் சாலை, சூரத், வதோதரா மற்றும் இறுதி நிறுத்தமான அகமதாபாத்தில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்