மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை சாம்பியனாகவும், இந்திய அணி இரண்டு முறை சாம்பியனாகவும் உள்ளது. இந்த இரு அணிகளும் அகமதாபாத்தில் சந்திக்கும் இறுதிபோட்டி சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் போட்டியைக் காண இந்தியா உட்பட உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு வரஉள்ளனர்.
இந்த போட்டிக்காக அகமதாபாத்தில் உள்ள ஹோட்டல்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி, விமான டிக்கெட்டுகள் ஏற்கனவே மூன்று முதல் நான்கு மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது உலகக்கோப்பை இறுதிப்போட்டி நெருங்கியதால் மீண்டும் விமான டிக்கெட்டுகள், ஹோட்டல்களின் விலை உயர்ந்துள்ளது.
இரண்டு லட்சத்தை எட்டிய ஹோட்டல் அறை கட்டணம்:
சில மாதங்களுக்கு முன்பு உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன், கிரிக்கெட் ரசிகர்கள் அவசரமாக அகமதாபாத்திற்கு தங்களது பயணத்தைத் திட்டமிட்டனர். இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன் ஹோட்டல் அறையின் விலை ரூ.24,000 ஆக உயர்ந்து. இப்போது அகமதாபாத்தில் ஒரு இரவுக்கு ஹோட்டல் அறைகளின் விலை ரூ.2,15,000 வரை உயர்ந்துள்ளது. தற்போது அகமதாபாத்தில் மிகவும் சாதாரண ஹோட்டல் அறைக்கு ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 எனவும், நான்கு நட்சத்திர, ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளின் விலை குறைந்தபட்சம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.2,15,000 வரை உயர்ந்துள்ளது.
விமான டிக்கெட்டின் விலை உயர்வு :
இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பே, நாட்டின் எந்த நகரத்திலிருந்தும் அகமதாபாத் செல்வதற்கான விமான டிக்கெட்டின் விலை 200% முதல் 300% வரை அதிகரித்துள்ளது. உதாரணமாக, டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் விமான டிக்கெட்டின் விலை தற்போது ரூ.15,000ஐ தாண்டியுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…