கடந்த நவம்பர் 19ஆம் தேதி நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனால் ரசிகர்கள் மட்டுமன்றி, இந்திய அணி வீரர்களும் வருத்தத்துடன் கண்களில் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
இந்த உலக கோப்பையைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் களமிறங்க உள்ளது. இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த தொடரின் போட்டிகள் 5 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.
அதன்படி, முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணியளவில் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், உலக கோப்பை இறுதிப்போட்டி ஏமாற்றம் அளித்ததாகவும், ஆனால் தங்களது விளையாட்டு குறித்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, ” வெளிப்படையாகக் சொல்லவேண்டும் என்றால் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது.”
“ஆனால் நீங்கள் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது அது சிறப்பான ஒரு பயணமாக இருந்தது. எங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் வீரர்களுக்கும் இந்தியா முழுவதும் நாங்கள் எங்கள் திறமையை மைதானத்தில் வெளிப்படுத்திய விதம் மிகவும் பெருமையாக இருந்தது. நாங்கள் போட்டி முழுவதும் கிரிக்கெட்டின் பாசிட்டிவ் பிராண்ட்டாக விளையாடினோம். அதற்காக நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.” என்று கூறினார்.
மேலும், இந்த டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாகவும், ராய்பூர் மற்றும் பெங்களூருவில் நடைபெறும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கு துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…