உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலா- இங்கிலாந்து வீரர்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தள்ளி வைக்கலாம் என்று இங்கிலாந்து வீரர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது என்றாலும் தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.இதன்விளைவாக உலக நாடுகள் முடங்கியுள்ளது.கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.எனவே உலகில் நடைபெற இருந்த பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வருகின்ற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி -20 போட்டி நடைபெற உள்ளது.எனவே கொரோனா பாதிப்பு காரணமாக உலக கோப்பை போட்டி நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் ஜேசன் ராய் பேட்டி ஒன்றில் கூறுகையில்,உலக கோப்பை போட்டியில் விளையாட அணிகளுக்கு போதிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டால் போட்டியை தள்ளிவைப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.