உலகக்கோப்பைக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு

Default Image

12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.

உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி பின்வருமாறு :

கேப்டனாக மோர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், லியாம் பிளங்கெட், ஜேம்ஸ் வின்ஸ்,  அடில் ரஷித், ஜோ ரூட்,  ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டாம் குர்ரான்,  லியாம் டாசன்,கிறிஸ் வோக்ஸ்,  மார்க்வுட்  ஜாப்ரா ஆர்சர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கபட்ட நிலையில் தற்போது திருத்தத்துடன் இறுதியான அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அறிவிக்கப்பட்ட இவர்கள் உலககோப்பை போட்டியில் விளையாட உள்ளனர்.மேலும் முதலில் அறிவிக்கப்பட்ட அணியில்  அலேக்ஸ் ஹேல்ஸ் மற்றும்  ஜோ டென்லி  இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டு உள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்