உலகக்கோப்பை 2023: சச்சின் கணித்த 4 அணிகள்..! இடம்பெறாத பாகிஸ்தான்..!
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 நேற்று தொடங்கியது. நடந்து முடிந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் 2023 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் குறித்து கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு கோப்பையுடன் களத்திற்கு சென்றபோது ஐசிசியிடம் சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது எந்தெந்த அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லவாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்தார். அப்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், 2011 உலகக் கோப்பையின் போது அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் காலிறுதி போட்டியை நினைவு கூர்ந்தார். 2011 உலகக் கோப்பையின் வரலாற்றுச் சாதனையை இந்திய அணி மீண்டும் சொந்த மண்ணில் மீண்டும் செய்ய முடியும். மைதானத்தில் கோப்பையை கைப்பற்றியது அற்புதமான அனுபவம். நாங்கள் இங்கே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலிறுதியில் விளையாடிக்கொண்டிருந்தோம்.
அந்த இரவு எங்களுக்கு ஒரு சிறப்பு இரவு. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார். இதன் மூலம், உலகக்கோப்பையை வெல்லும் வலுவான அணிகளில் இந்திய அணியும் ஒன்று என சச்சின் கூறினார். எங்கள் அணி நன்றாக விளையாடுகின்றனர். எங்களிடம் வலுவான பேட்டிங் யூனிட் உள்ளது. மிகச் சிறந்த ஆல்ரவுண்ட் உள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா மிகச்சிறந்த அணியைக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும் இதே நிலைதான் அவர்களிடம் நல்ல அணி இருப்பதாக நான் நினைக்கிறேன்.
மூன்றாவது அணி இங்கிலாந்து இருக்கும் என்று நம்புகிறேன். அனுபவம் மற்றும் சில புதிய முகங்களின் கலவையுடன் இங்கிலாந்து மீண்டும் மிகவும் வலுவான அணியாக உள்ளது. எனது நான்காவது அணி நியூசிலாந்து. அவர் 2015 மற்றும் 2019 இல் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளார். அவர்களின் சாதனையை நீங்கள் பார்த்தால், நியூசிலாந்து எப்போதும் உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு வருவதை நான் காண்கிறேன் என தெரிவித்தார்.
2023 உலகக் கோப்பையின் அரையிறுதி அணியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சச்சின் தேர்வு செய்யவில்லை. இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் அரையிறுதிக்கு கணித்த 4 அணிகளில் பாகிஸ்தான் அணி இடம்பெற்றது. இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என சேவாக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் இந்தியா தங்கள் முதல் உலகக்கோப்பை போட்டியை சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதவுள்ளது.