உலகக்கோப்பை 2023: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச தேர்வு..!

நடப்பு உலக கோப்பை இறுதி கட்டத்தை எட்டியது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதுகிறது. 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டியில் இவ்விருஅணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இன்றைய இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்(விக்கெட் கீப்பர் ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள்:
டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ்(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
இரு அணிகளும் அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் அரையிறுதியில் விளையாடிய அதே வீரர்கள் தான் விளையாடுகிறார்கள். உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய 8-வது முறையும், இந்திய அணி 4-வது முறையும் களமிறங்குகிறது. இதில் இந்தியா இரண்டு முறையும், ஆஸ்திரேலியா ஐந்து முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது.