உலகக் கோப்பை 2023: இன்று 2வது லீக் போட்டி.. பாகிஸ்தானை சமளிக்குமா நெதர்லாந்து?

Pakistan vs Netherlands

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த 282 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் மற்றும் க்ளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.  இதையடுத்து, 283 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 36.2 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே 121 பந்துகளில் 152* ரன்களும்,  ரச்சின் ரவீந்திரன் 96 பந்தில் 123* ரன்களும் அடித்து விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளை பெற்றது. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் 7 சுமார் ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் 2-வது லீக்கில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

1996-ம் ஆண்டு உலக சாம்பியனான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த முறை பாபர் அசாம் தலைமையில் களமிறங்குகிறது. தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான், 14-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தக்கூடும் என கருதப்படுகிறது. இருப்பினும், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வி, உலகக் கோப்பைக்கு முன்பாக இரு பயிற்சி ஆட்டமும் சிறப்பாக அமையவில்லை.

இதனால், நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்று உத்வேகத்தை பெற வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் தொடக்கம் தான் கவலைக்குரியதாக உள்ளது. ஆனால், கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது போன்ற பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீசியில் வலுவாக இருக்கிறது. முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தை வைத்து பார்க்கும் போது இது மேலும் ஒரு அதிக ரன் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, நெதர்லாந்துடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் கையே ஓங்கி நிற்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரே அணி நெதர்லாந்து தான். தகுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான அந்த அணி இதுவரை 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இந்த தகுதி பெற்றுள்ள நெதர்லாந்து அணியில் தகுதி சுற்றில் விளையாடாத சுழற்பந்து வீச்சாளர்கள் காலின் ஆக்கர்மான், ரால்ஃப் வான் டெர் மெர்வி, வேகப்பந்து வீச்சாளர் பால் வான் மீகிரன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். பேட்டிங்கில் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வெஸ்லி பாரேசி அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.

மேக்ஸ் டவுட், விக்ரம்ஜித் சிங், தேஜாநிடமானுரு, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்,  லோகன் வான் பீக், பாஸ் டி லீட், வான்டெர் மெர்வ் உள்ளிட்டோர் நெதர்லாந்து அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து, முடிந்த வரை கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 6 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி கண்டுள்ளது. எனவே, இன்றை உலகக்கோப்பையில் இரண்டாவது லீக் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி: பாபர் ஆசாம் (c), முகமது ரிஸ்வான் (w/k), இமாம்-உல்-ஹக், ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், ஆகா சல்மான், உசாமா மீர், அப்துல்லா ஷபீக் ஆகியோர் உள்ளனர்.

நெதர்லாந்து அணி: ஸ்காட் எட்வர்ட்ஸ் (c & w/k), விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பாரேசி, பாஸ் டி லீடே, கொலின் அக்கர்மேன், தேஜா நிடமனூரு, ரோலோஃப் வான் டெர் மெர்வே, சாகிப் ஜுல்பிகார், லோகன் வான் பீக், பால் வான் மீகெரென், ரியான் க்ளீன், ஆர்ப்ரியான்ட் ஏங்கல்பிரெக்ட், ஷாரிஸ் அகமது ஆகியோர் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident