#WomensAsiaCup: 37 ரன்களுக்கு சுருண்ட தாய்லாந்து , 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் இன்று 19ஆவது போட்டியாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய தாய்லாந்து அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 37 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆயினர். இந்தியா சார்பில் ஸ்நே ராணா 3 விக்கெட்களும், தீப்தி சர்மா மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
38 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 40 ரன்களை எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்த ஸ்நே ராணா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப்பெற்று(NRR-3.141) முதலிடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.