#WOMENSASIACUP: டக்ஒர்த்லூயிஸ் முறைப்படி இந்தியா தனது இரண்டாவது போட்டியில் எளிதான வெற்றி!!

Default Image

மலேசிய அணியை வீழ்த்தி ஆசியக்கோப்பையில், இந்தியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஏழு அணிகள் பங்கேற்று விளையாடும் ஆசியக்கோப்பை மகளிர் டி-20 போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக விளையாடி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று அக்-3 அன்று மலேசியா மற்றும் இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற மலேசியா முதலில் பௌலிங் செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 181/4 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மேகனா 69 ரன்களும், ஷெபாலி வர்மா 46 ரன்கள் மற்றும் ரிச்சா கோஷ் 33 ரன்களும் குவித்தனர்.

182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி 5.2 ஓவர்களில் 16/2 என்ற நிலையில் ஆடிக்கொண்டிருக்கும் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டக்ஒர்த்லூயிஸ் (DLS) முறைப்படி 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் தனது 2 ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

இந்த வெற்றியினால் இந்தியா, 2 வெற்றிகள் 4 புள்ளிகளுடன் (NRR- 2.803) இரண்டாம் இடம் வகிக்கிறது. பாகிஸ்தான் அணி 2 வெற்றிகள் 4 புள்ளிகளுடன் (NRR- 3.059) முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா தனது அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை இன்று அக்-4 எதிர்கொள்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament