வரலாற்றை எழுதுமா?இந்தியா..இறுதிப்போட்டியில் INDVAUS..!தரமான சம்பவம் மறவாதீர்
மகளிர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதில், வெற்றிபெற்று வரலாற்றை எழுதுமா இந்தியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரிலியாவில் மெல்பர்னில் இன்று(ஞாயிறு) பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகின்ற இந்த இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்தியா அணியை பொறுத்தவரை ஷபாலி வர்மா பேட்டிங்கில் நம்பிக்கையாக இருக்கிறார். அதே போல் ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்ப்ரீத் , ஜெமிமா போன்ற முன்னணி வீராங்கனைகள் அணியில் இருப்பது கூடுதல் பலம் பந்துவீச்சை பொறுத்தவரையில் பூனம் யாதவ், ராதா, ராஜேஸ்வரி, தீப்தி சர்மா ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் முதல்முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள இந்தியா முத்திரை பதிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஆனது இந்திய ரசிகர்கள் மத்தியில் எகிரியுள்ளது.
டி-20 உலகக் கோப்பையை பொறுத்தவரை தொடர்ந்து 6வது முறையாக ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.இதுவே அணியின் பலத்தை வெளிக்கட்டுவதாக உள்ளது.
இருந்த போதிலும் நடப்புத் தொடரின் முதல் லீக் போட்டியிலே ஆஸ்ரேலியாவை இந்தியா வீழ்த்தியுள்ளதால் பதட்டம் இல்லாமல் இந்திய வீராங்கனைகள் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றனர்.ஆஸ்தி., சொந்த மண்ணில் இந்த போட்டி நடப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.மேலும் இன்று சர்வதேச மகளிர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மகளிருக்கும் தினச்சுவடு சார்பாக இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்