மகளிர் உலகக்கோப்பை தொடர் – இந்திய அணி அறிவிப்பு
கேப்டன் மிதாலி ராஜ் தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை அறிவித்தது பிசிசிஐ.
மார்ச் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள மகளிர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மிதாலி ராஜ் தலைமையிலான அணியே நியூசிலாந்துடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 6-ஆம் தேதி ICC மகளிர் உலகக் கோப்பைக்கான முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி பே ஓவல், டௌரங்கா மைதானத்தில் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 ODI & ICC மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காத்திருப்பு வீரர்கள்: சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், சிம்ரன் தில் பகதூர்.
???? NEWS ????: India Women’s squad for ICC Women’s World Cup 2022 and New Zealand series announced. #TeamIndia #CWC22 #NZvIND
More Details ????https://t.co/qdI6A8NBSH pic.twitter.com/rOZ8X7yRbV
— BCCI Women (@BCCIWomen) January 6, 2022