மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியா 356 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் நியூஸிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரின் ஹாக்லி ஓவல் மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக அலிசா ஹீல் 170 ரன்களும், ரேச்சல் ஹெய்ன்ஸ் 68, பெத் மூனி 62 ரன்கள் குவித்தனர்.
இங்கிலாந்து அணியில் அன்யா ஷ்ரப்சோல் 3 விக்கெட்டை பறித்தார். 357 ரன்கள் இலக்கு கடந்து இங்கிலாந்து மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா..? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025