மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

இந்திய வீராங்கனை த்ரிஷா கொங்கடி, U19 டி20 உலக கோப்பை தொடரில் அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தினார்.

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ் ஓவல் மைதானத்தில்  நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியாவின் வெற்றியில் கோங்காடி த்ரிஷா முக்கிய பங்கு வகித்தார். அட ஆமாங்க… மகளிர் U19 டி20 உலக கோப்பையை வென்ற இந்தியா அணியின் கொங்காடி த்ரிஷா, ஆட்ட நாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை கைப்பற்றியுள்ளார். இந்த தொடரில் அவர் அதிரடியான பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தலான திறமைகளை காட்டினார்.

இறுதிப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் மற்றும் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறார் கொங்கடி த்ரிஷா. இந்தப் போட்டியில் கோங்காடி ஏழு இன்னிங்ஸ்களில் 77க்கும் அதிகமான சராசரியிலும் 147 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 309 ரன்கள் எடுத்தார்.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, ஆட்டத்தை துவக்கிய போது ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்தார். இறுதிப் போட்டி மட்டுமல்ல, இந்த தொடர் முழுவதும் கோங்காடி சிறப்பாகச் செயல்பட்டார். இதுமட்டுமின்றி, பெண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையில் முதல் சதம் அடித்த சாதனையையும் படைத்துள்ளார்.

அசத்திய த்ரிஷா கொங்கடி:

  • தொடர் நாயகி விருது (309 ரன்கள். 7 விக்கெட்டுகள்)
  • ஆட்ட நாயகி (இறுதிப்போட்டியில் 44 ரன்கள். 3 விக்கெட்டுகள்)
  • யு19 டி20WCல் சதமடித்த ஒரே வீராங்கனை
  • யு19 டி20WCல் ஒரு சீசனில் அதிகபட்ச ரன்கள் (309)
  • யு19 டி20WCல் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (10)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்