மகளிர் டி20 உலகக்கோப்பை நடத்த முடியாது! ஜெய்ஷா திட்டவட்டம்!

Jay Shah About women's t20

மும்பை : ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்தியாவில் நடத்த மாட்டோம் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, ஆகஸ்ட் 14 மும்பையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்திய டி20 மகளிர் உலகக்கோப்பை நடத்துவது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். வங்கதேசத்தில் கலவரம் நடந்து வருவதால்  டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருந்ததாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனவே, இதன் காரணமாக இன்று தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் பத்திரிகையாளர்களுடனான உரையாடலின் போது இது தொடர்பாக ஜெய்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் கூறிய அவர், “எங்களிடம் ஐசிசி, இந்தியாவில் டி20 மகளிர் உலகக்கோப்பையை நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள், அதற்கு இல்லை என்று நான் திட்டவட்டமாகச் சொன்னேன்” என ஜெய்ஷா கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஜெய்ஷா மழையை காரணம் காட்டி மகளிர் உலகக்கோப்பை நடத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார். ” இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ளது. எனவே, இப்போது இங்கு போட்டியை நடத்தமுடியாது” எனவும் வெளிப்படையாகவே அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய ஜெய்ஷா “கண்டிப்பாக அடுத்த டி20 மகளிர் உலகக்கோப்பையை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டு இருக்கிறது. மற்றபடி, நாங்கள் எதிலும் தொடர்ச்சியாக டி20 மகளிர் உலகக்கோப்பையை நடத்துவோம் என்று சொல்லவே இல்லை”, எனவும் கூறினார்.

இந்தியா  அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. எனவே, அதனையும் கருத்தில் கொண்டு பேசிய ஜெய்ஷா ” வருகின்ற வங்கதேசம் அணிக்கு எதிரான தொடர் எங்களுக்கு முக்கியமான ஒரு தொடர் எனவும்  அந்த தொடரை எதிர்நோக்கி நாங்கள் காத்து இருக்கிறோம்”, எனவும் ஜெய்ஷா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்