பெண்கள் குறித்து சர்சை கருத்து…!பாண்டியா, கே.எல்.ராகுல் விளையாட தடை..!
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியாவும் கே.எல்.ராகுலும் கலந்துகொண்டனர்.அதில் ஹர்த்திக் பாண்டியா பெண்கள் குறித்தும் இனவெறியை தூண்டும் வகையிலும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.இதனால் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.விசாரணை நடத்திய பிறகு தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.