#WPL 2024 : நாங்களும் வருவோம் ..! நாளை தொடங்கும் பெண்கள் ஐபிஎல் ..!

ஆண்களுக்கு நடைபெறுகிற IPL (ஐபிஎல்) போலவே பெண்களுக்கும் WPL ( Women’s Premier League ) கடந்த ஆண்டு (2023) முதல் தொடங்கபட்டது. கடந்த ஆண்டு இந்த WPL தொடருக்கு தகுந்த வரவேற்பு கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் கிடைத்தது. இந்த பெண்கள் ஐபிஎல் தொடருக்கு ஒரு தனிப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில்,  WPL-யின் இரண்டாவது சீசன் நாளை மாலை பெங்களூரில் தொடங்குகிறது. இதவும் பிசிசிஐ-யால் (BCCI) தொடங்கப்பட்ட ஒரு தொடராகும்.

இந்த பெண்கள் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யூபி வாரியர்ஸ் என்று 5 அணிகள் உள்ளது.  ஒரு அணி தலா இரண்டு முறை மற்ற அணிகளுடன் விளையாடுவார்கள். அப்படி விளையாடி ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகள் விளையாடுவார்கள். இறுதியாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதி போட்டிக்கு நேராக தகுதி பெரும்.

#INDvsENG : நாளை தொடங்கிறது 4-வது டெஸ்ட் போட்டி ..! 

2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணி ப்ளெ ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியை விளையாடுவார்கள். அந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இப்படி, ப்ளெ ஆப் போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 22 போட்டிகள் நடைபெறும்.  கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெண்கள் ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது.

அதில் மும்பை அணி டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் WPL 2023 கோப்பையை மும்பை வென்றது. இந்த ஆண்டு, முதல் 11 போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்திலும், அடுத்த 11 போட்டிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது.

இதனால் ப்ளெ-ஆப் மட்டும் இறுதி போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் நடைபெறும்.  கடந்த ஆண்டு இறுதி போட்டியில் விளையாடிய மும்பை அணியும், டெல்லி அணியும் இந்த தொடரின் முதல் போட்டியாக நாளை விளையாடவுள்ளனர். இந்த போட்டி நாளை மாலை 7.30 மணிக்கு பெங்களூரில் சின்னசாமி மைதானத்தில் தொடங்கும்.  இந்த WPL 2024 தொடர் முழுவதும் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும்,  ஜியோ சினிமா ஆப்பிலும் நேரலையில் ஒளிபரப்பாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்