#Women’sIPL:அடுத்த ஆண்டு முதல் ‘மகளிர் ஐபிஎல்’ – பிசிசிஐ!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியானது 2023 இல் தொடங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் மற்றும் தொடக்க சீசனில் மகளிர் ஐபிஎல் போட்டிகளில் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக,பிசிசிஐ தலைவரான கங்குலி கூறியதாவது:”பெண்கள் ஐபிஎல் 2023 முதல் தொடங்க உள்ளது,மேலும் அடுத்த ஆண்டு முதல் 6 அணிகள் கொண்ட போட்டியை நடத்துவதற்கான திட்டத்தில் வாரியம் ஏற்கனவே வேலை செய்யத் தொடங்கியுள்ளது.
“தற்போதைக்கு, எங்களால் பல விவரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது, ஆனால்,இந்த லீக் போட்டியை நடத்த நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.சில உரிமையாளர்கள் ஏற்கனவே ஆர்வம் காட்டியுள்ளனர் மற்றும் இந்த போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளனர். நாங்கள் 6 அணிகளுடன் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.இதற்கான,ஏல செயல்முறை மற்றும் போட்டியின் மற்ற முக்கிய அம்சங்களில் எங்கள் குழு பணியாற்றி வருகிறது.
நாங்கள் அடுத்த கோடை மாதத்தில் பெண்கள் ஐபிஎல்-ஐ தொடங்கலாம்,எனினும், எல்லாவற்றையும் கலந்தாலோசித்த பிறகு,வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்”,என்று தெரிவித்துள்ளார்.
Women’s IPL from next year: BCCI Source
Read @ANI Story | https://t.co/hcDfCCvytj#IPL #BCCI #CricketTwitter pic.twitter.com/kQP76YVW79
— ANI Digital (@ani_digital) April 17, 2022