மகளிர் தினம் 2023: இன்று குஜராத்-பெங்களூரு போட்டிக்கு இலவச அனுமதி.!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று, நடைபெறும் மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கு இலவச அனுமதி என்று அறிவிப்பு.
உலகெங்கும் உள்ள அனைத்து பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில், ஊக்குவிக்கும் வகையில், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் இன்று(மார்ச்-8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்களுக்கு நடத்தப்படும் ஐபிஎல் தொடர் போன்றே, பெண்களுக்கும் இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், இன்று மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெறும் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டிக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகளிர் பிரீமியர் லீக் தனது ட்விட்டரில், மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், GGvsRCB போட்டிக்கு அனைவருக்கும் இலவச அனுமதி என்று பகிர்ந்துள்ளது.
???? ???????????????????????????? ???????????? ???????? ???????????????? ???? ???? ???????????????????????????? ????????????! ????????#TATAWPL celebrates Women’s Day with ???????????????? ???????????????????? ???????????? ???????????? for the #GGvRCB match on March 8, 2023! ???? ???? pic.twitter.com/AxwTsGI3vA
— Women’s Premier League (WPL) (@wplt20) March 6, 2023