இன்று தொடங்கும் மகளிர் ஆசிய கோப்பை ..! இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல் .!

India-W vs Pakistan-W

மகளிர் ஆசிய கோப்பை : இந்த ஆண்டில் அடுத்ததாக மிகப்பெரிய சர்வேதச கிரிக்கெட் தொடராக பார்க்கப்படுவது மகளீருக்கான ஆசிய கோப்பை தொடர் தான். கடந்த 2022-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 7-வது முறையாக ஆசிய கோப்பை தொடரை வென்று அசத்தியது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த தொடர்ந்து இன்று (ஜூலை-19) தொடங்குகிறது. ஆசியா கண்டத்தில் உள்ள கிரிக்கெட் அணிகளான இந்தியா, பாகிஸ்தான்,  இலங்கை, வங்கதேசம், நேபால், ஐக்கிய அரபு நாடுகள் (UAE), மலேசியா மற்றும் தாய்லாந்து என 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த 8 அணிகளும் 4 அணிகளாக மொத்தம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடுவார்கள்.

அதன்பிறகு புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், இரண்டு பிரிவிலும் முன்னிலை பெற்ற முதல் இரண்டு அணிகலும் அடுத்த சுற்றான அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள். இதை தொடர் வருகிற ஜூலை-28 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியாக A-பிரிவில் தற்போது யூஏஇ அணியும், நேபால் அணியும் மோதியது, அதில் நேபால் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது போட்டியாக இன்று இந்திய மகளீர் அணியும், பாகிஸ்தான் மகளீர் அணியும் இலங்கையில் உள்ள தம்புள்ளை மைதானத்தில் மோதவுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒரு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அது ஆடவர் அணியாமலும் சரி, மகளீர் அணியானலும் சரி.

அதே போல இந்த போட்டியில் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லாமலே இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில் வெற்றியுடன் எந்த அணி தொடங்குவார்கள் என்பதனை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் 11 வீராங்கனைகள் : 

இந்திய அணி :

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), எஸ் சஜனா, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், தயாளன் ஹேமலூர்தா, ஏணுகா, ரேணுகா தாக்க . சோபனா.

பாகிஸ்தான் அணி :

சித்ரா அமீன், குல் பெரோசா, துபா ஹாசன், முனீபா அலி (விக்கெட் கீப்பர்), நிதா தார் (கேப்டன்), அலியா ரியாஸ், பாத்திமா சனா, ஒமைமா சோஹைல், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால், சையதா அரூப் ஷா, நஜிஹா அல்வி, தஸ்மியா ரூபாப், இராம் ஜாவேத்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்