#Womens Asia Cup 2022: இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.

Published by
Muthu Kumar

மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

ஆசியக்கோப்பை மகளிர் தொடர் 2022, இன்று அக்-1 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளான இன்று இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தது. இதன் படி களமிறங்கிய இந்திய அணி      20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். இலங்கை அணியில், ஒஷதி ரணசிங்கே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 30 ரன்களும், ஹர்ஷிதா மாதவி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்களும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரக்கர் தலா 2 விக்கெட்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ஆட்ட நாயகனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் 2புள்ளிகளுடன் (3.443NRR) முதலிடத்திலும், இந்தியா 2 புள்ளிகளுடன் (2.050NRR) இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

4 minutes ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

38 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

53 minutes ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

3 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago