#Womens Asia Cup 2022: இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றது.
மகளிருக்கான ஆசியக்கோப்பை போட்டியில், இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
ஆசியக்கோப்பை மகளிர் தொடர் 2022, இன்று அக்-1 ஆம் தேதி தொடங்கியது. தொடக்க நாளான இன்று இந்திய அணி, இலங்கையை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பௌலிங் செய்யப்போவதாக அறிவித்தது. இதன் படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். இலங்கை அணியில், ஒஷதி ரணசிங்கே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 30 ரன்களும், ஹர்ஷிதா மாதவி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்களும், தீப்தி சர்மா மற்றும் பூஜா வஸ்ட்ரக்கர் தலா 2 விக்கெட்களும் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர். ஆட்ட நாயகனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் 2புள்ளிகளுடன் (3.443NRR) முதலிடத்திலும், இந்தியா 2 புள்ளிகளுடன் (2.050NRR) இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.