இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அனைவரும் தங்களுக்கு பிடித்த பெண்கள் , தங்கைகள், அம்மா, மனைவி என அனைவர்க்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி அனுஷ்கா மற்றும் தனது மகள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கோலி, “குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும், நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதனைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும், கடவுள் அவர்களுக்குள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என கூறினார்.
மேலும், பெண்கள் ஆண்களாகிய நம்மைவிட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகவும் சக்திமிக்க, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப்போகிறவளுக்கும், உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…