வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2-வது டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பல உலக சாதனைகளை முறியடித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி-20 போட்டிகள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டி-20யில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று இரண்டாவது டி-20 போட்டி செஞ்சுரின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்தது.
259 ரன்கள் இலக்கு: அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 118 ரன்களும், கைல் மயர்ஸ் 51 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 259 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், பந்தை மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களாக பறக்கவிட்டனர்.
10 ஓவரில் 149: அந்த அணி 5.3 ஓவர்களில் 100/0 ரன்களை கடந்தது. முதல் 10 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 149 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக 2016இல் 147 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது தென்னாப்பிரிக்கா முறியடித்துள்ளது.
டி-20யில் வரலாறு: மேலும் 259 ரன்கள் இலக்கை தென்னாப்பிரிக்க அணி 18.5 ஒவர்களிலேயே அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் 247 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது தான் இதுவரை சாதனையாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியில் குயின்டன் டிகாக் 100 ரன்களும், ஹென்றிக்ஸ் 68 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 38 ரன்களும் குவித்தனர்.
ஒருநாள் அதிகபட்ச சேஸ்: ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் 434 ரன்கள் இலக்கை சேஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20யிலும் தென்னாப்பிரிக்க அணி அதிகபட்ச ரன் சேஸ் செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…