இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்- ரோஹித்..!
கங்குலிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ரோஹித் சர்மா.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சிறந்த கேப்டன் மற்றும் தற்பொழுது பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்காக செய்த சாதனைகள் பற்றி சொல்லி தெரிய வேண்டாம், சௌரவ் கங்குலியை சிறந்த கேப்டன் என்று அதிகபேர் கூறுவது உண்டு.
இந்நிலையில் இவருக்கு இன்று 49 வது பிறந்தநாள் இவருடைய பிறந்த நாளை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் இவருக்கு அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் ரோஹித் சர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் “இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ நல்வாழ்த்துக்கள்”நீங்கள் தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Many many happy returns of the day @SGanguly99 hope you continue to take Indian cricket forward.
— Rohit Sharma (@ImRo45) July 8, 2020