WIPL2023: மகளிர் ஐபிஎல் இன்று கோலாகல தொடக்கம்; முதல் போட்டியில் மும்பை-குஜராத் அணிகள் மோதல்.!
மகளிர் ப்ரீமியர் லீக்(WIPL) 2023 தொடரின் முதல் சீசன் இன்று மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் திருவிழாக்களில் ஐபிஎல்-க்கு எப்போதும் முதலிடம் தான், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதால் இதற்கு பல நாடுகளிலும் ரசிகர்கள் வரவேற்பு கிடைத்திருப்பதால், உலக அளவில் ஐபிஎல் தான் சிறந்த கிரிக்கெட் தொடர் என்றே சொல்லலாம்.
ஆண்களுக்கு மட்டுமே இதுவரை இருந்த ஐபிஎல் தொடர் நடப்பு ஆண்டு முதல் மகளிருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான ஏலம் நிறைவடைந்து மொத்தம் 5 அணிகள் இந்த மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கின்றன. அவை டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் யு.பி வாரியர்ஸ் என 5 அணிகள் மோதும் இந்த தொடர் இன்று தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறுகிறது.
இன்று மும்பையிலுள்ள டி.ஒய் பட்டில் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டி ஜியோ சினிமா ஆப் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் இலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி: தாரா குஜார், ஹர்மன்ப்ரீத் கவுர்(C) , நாட் ஸ்கிவர், பூஜா வஸ்த்ரகர், அமெலியா கெர், ஹீதர் கிரஹாம், அமன்ஜோத் கவுர், ஹேலி மேத்யூஸ், க்ளோ ட்ரையன், ஹுமைரா காசி, ஜிந்திமணி கலிதா, நீலம் பிஷ்ட், இசபெல் வோங், யாஸ்திகா பாலா பாட்டியா, பிரியங்கா
குஜராத் ஜெயன்ட்ஸ் அணி: சோபியா டன்க்லி, சபினேனி மேகனா, ஆஷ்லீக் கார்ட்னர், ஹர்லீன் தியோல், டியான்ட்ரா டோட்டின், அனாபெல் சதர்லேண்ட், ஸ்னேஹ் ராணா, ஜார்ஜியா வேர்ஹாம், மான்சி ஜோஷி, தயாளன் ஹேமலதா, தனுஜா கன்வர், ஹர்லி காலா, அஷ்வனி குமார், பெத் மூனி(C), சுஷ்மா பட் மூனி, பர்சோடியா வர்மா, பர்சோடியா வர்மா , ஷப்னம் ஷகீல்