ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றால்தால் உச்சநிலையை அடைந்ததாக அர்த்தம்- ஜோ ரூட்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் , டெஸ்ட் அணியின் கேப்டனுமான ஜோ ரூட் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் , நாங்கள் உலகக்கோப்பையை வென்றதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்ட இலக்கை பாதி கடந்து விட்டோம்.
அடுத்து வர இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்றால் கிரிக்கெட்டில் உச்சநிலையை அடைந்ததாக அர்த்தம்.
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை தோற் கடிதோம். இந்த போட்டியில் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்தனர். இதை விட அதிகமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் போராட வேண்டும்.
2005-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.அப்போது எனக்கு வயது 14 . அந்த போட்டியை நான் டிவியில் பார்த்தேன் .இந்த போட்டி என்னை வெகுவாக கவர்ந்தது.அதே போல இந்த முறையும் இளம் வீரர்களை கவரும் வகையில் சாதித்து காட்டுவோம் என கூறினார்.