பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்ல் 4, எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர், ஆண்ட்ரே ரஸ்ஸல் சொற்ப ரன்னில் வெளியேற பிறகு ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40, ரோஸ்டன் சேஸ் 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷரீபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
143 ரன்கள் இலக்குடன் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம்,
ஷகிப் அல் ஹசன் இருவரும் களமிறங்க ஆட்டம் தொடக்கத்திலே ஷகிப் அல் ஹசன் 9 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து லிட்டன் தாஸ் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய முகமது நயிம் 17 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சௌமியா சர்க்கார் 17, முஷ்பிகுர் ரஹீம் 8 ரன் எடுத்து நடையை கட்டினர்.
சிறப்பாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 44 ரன்கள் குவித்தார். இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர் முடிவில் 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டை இழந்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியை தழுவியது. வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு புள்ளிகளுடன் உள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…