விராட் கோலியை விட வில்லியம்சன் தான் சிறந்த கேப்டன் – மைக்கேல் வான்..!
விராட் கோலியை விட வில்லியம்சன் சிறந்த கேப்டன் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் கேன் வில்லியம்சன் பல சாதனைகள் படைத்துள்ளார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். மேலும் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் (578) எடுத்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில் கேன் வில்லியம்சனை பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த வகையில், மைக்கேல் வான் கூறியது ” நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியன்சன் இந்தியாவில் பிறந்திருந்தால் இன்று அவர்தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். வில்லியம்சன்தான் விராட் கோலியை விட சிறந்த கிரிக்கெட் வீரர். இந்த உண்மையை யாரும் சரி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
வருகின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலியைவிட, கேன் வில்லியம்சன் அதிக ரன்களை குவிப்பார் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரையில் என்னிடம் கேட்டால் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் தான் சிறந்த கேப்டன் என்று தெரிவித்துள்ளார்.