2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா?…காயம் எப்படி இருக்கு – தோனி சொன்ன பதில்!

MS Dhoni

முன்னாள் இந்திய கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனி, 2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் விளையாடுவாரா என்று கேள்விகள் இருந்து வந்த நிலையில், இதுகுறித்து அவரே ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக சாம்பியன் படத்தை வென்றது. இந்த தொடரில் எம்எஸ் தோனியிடம் அடுத்த ஆண்டு விளையாடுவீர்களா என்று கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டது.

இன்னும் 6 மாதங்கள் இருக்கு, அப்போது உடற்தகுதி எப்படி இருக்கும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ரசிகர்களின் அன்பிற்காக மீண்டும் ஒருமுறை விளையாட முயற்சிக்கிறேன் என தெரிவித்தார். மறைமுகமாக 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்றே சொன்னார். இதனிடையே, முழங்கால் வலியோடு விளையாடி வந்த எம்எஸ் தோனி, ஐபிஎல் தொடர் முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் 6 மாத ஓய்வுக்கு பிறகு அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியுமா என எழுந்தது.

பாரா ஆசிய விளையாட்டு – இன்று 4வது தங்கம், 3 வெண்கலம், 4 வெள்ளி.. பதக்க வேட்டையில் இந்தியா!

இந்த சூழலில், 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அனைவரின் கண்களும் சிஎஸ்கே அணி பக்கமே உள்ளது. ஏனென்றால், ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், ரசிகர்களின் அன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது, தோனி கூறிய கால அவகாசம் முடிந்தது. இந்த சமயத்தில்  ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ம் தேதி கடைசி நாளாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,  அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்த தகவல் விரைவில் தெரியவரும்.  இருப்பினும், தோனியின் முழங்கால் காயம் எந்த நிலையில் உள்ளது, அறுவை சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்துவிட்டாரா என்ற சந்தேகங்கள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் வரையாவது ஆளுநரை மாற்ற வேண்டாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அப்போது, கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறினார். அந்நிகழ்ச்சியில் தோனிக்கு அருகில் இருந்த நபர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார் என திருத்தம் செய்தார். இதற்கு, தோனியும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளேன் என கூறியதற்கு ஆமாம் என தெரிவித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின் அறுவை சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய தோனி, அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. நவம்பரில் முழுமையாக குணமடைவேன் என்றும் தினசரி வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள் என கூறினார். இதன் மூலம் 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே கேப்டனாக தோனி விளையாடுவார் என்று உறுதியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், மக்கள் என்னை ஒரு நல்ல மனிதனாக நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனவும் தோனி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque