சென்னையில் இன்று வாழ்வா?சாவா? போட்டி; இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை.!
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் தொடரை தீர்மானிக்கும், 3-வது ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தக்கவைத்துக்கொண்டது. ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் இறுதிப்போட்டி இன்று சென்னையில் நடைபெறுகிறது, சேப்பாக்கம் மைதானம் புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு, சென்னையில் நீண்ட நாட்கள் கழித்து இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி: ரோஹித் சர்மா(C), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல்(W), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன் , வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக்
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித்(C), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி(W), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், ஜோஷ் இங்கிலிஸ்