இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, சைனி, சாஹல் ஆகியோரின் ஓவரிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து நொறுக்கினர்.
ஷமி மட்டும் ஓரளவு ரன்களை கட்டுப்படுத்தினார். பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, தவான் இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். கேப்டன் கோலி, மயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் நாளை களமிறங்கியுள்ளது. இரண்டாவது போட்டியில் எந்தவித மாற்றமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி தோல்விக்கு காரணம் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு தான் எனவும் ஆஸ்திரேலிய வீரர்கள் பும்ரா,சைனி மற்றும் சாஹல் ஆகியோர் ஓவரிகளில் ரன் சேர்ந்தபோது, இந்திய அணியில் புதிய பந்துவீச்சாளரை பந்து வீச்சாளர் இல்லை.
அதனால், அவர்களுக்கே மீண்டும், மீண்டும் பந்து வீச வைக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி இருந்தார். மேலும், ஒரே ஒரு ஆல்-ரவுண்டராக ஜடேஜா மட்டுமே இடம் பெற்று இருந்தார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…