விதிகளை மீறி குடும்பத்தை தங்க வைத்த மூத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ ?
சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விராட்கோலி தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதி தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
இந்நிலையில் விதிகளை மீறி உலககோப்பை தொடரில் மூத்த வீரர் ஒருவர் உலகக்கோப்பை தொடர் முழுவதும் தன் குடும்பத்தை தன்னுடன் தங்க வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் 3-ம் தேதி கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது மூத்த வீரர் ஒருவர் தொடர் முழுவதும் தன் குடும்பத்தை தங்க வைக்க அனுமதி கேட்டார்.ஆனால் அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டது.இதையடுத்து அனுமதி மீறி அந்த மூத்த வீரர் தொடர் முழுவதும் தனது குடும்பத்தை தன்னுடன் வைத்து இருந்தாக தற்போது தகவல் வெளியாகி வெளியாகி இருப்பதால் அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அவர்களின் குடும்பத்துடன் 15 நாள்கள் அனுமதி கொடுக்கப்பட்டது.அதுவும் உலகக்கோப்பை தொடங்கிய 20 நாள்கள் கழித்து இந்திய அணி வீரர்கள் தங்கள் குடும்பத்துடன்தங்க அனுமதி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.