ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் 74 ரன்கள் குவித்தால் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 86 ஐபிஎல் போட்டிகள் விளையாடி 2155 ரன்கள் அடித்துள்ளார். இதில் 193 பவுண்டரிகளும் 55 சிக்ஸர்களும் அடித்துள்ளார். மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 5 போட்டிகள் விளையாடி நிலையில், 133 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். கேப்டனாக மட்டுமே அவர் 926 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்த வருட ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும் நோக்கத்துடன் இரண்டு அணியை சேர்ந்த வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடக்கும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்கள் குவித்தால் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக அவர் அடித்த ரங்களின் எண்ணிக்கை 1,000 ஆகிவிடும். இந்த சாதனையை ஸ்டீவ் ஸ்மித் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…