2023 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? – பிசிசிஐ கொடுத்த பிக் அப்டேட்!
எதிர்பார்த்ததை விட விரைவில் மீண்டும் விளையாடும் கட்டத்திற்கு ரிஷப் பந்த் வருவார் என பிசிசிஐ நம்பிக்கை.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் திருவிழா நிறைவடைந்த நிலையில், 2023ம் ஆண்டை ரசித்து கொண்டிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தாண்டே மற்றொரு பிரம்மாண்ட விருந்து காத்திருக்கிறது. அது தான் 2023 ஒருநாள் உலக்கோப்பை தொடர். இதுவரை இந்தியாவில் மூன்று முறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளது. அதுவும், இதுவரை சேர்ந்து நடத்திய நிலையில், இம்முறை ஒரு நாள் உலகக் கோப்பையை இந்தியா தனியாக நடத்தவுள்ளது.
உலகக் கோப்பை:
2023 ஐசிசி உலகக் கோப்பையின் 13வது சீசனாகும் இது, வரும் அக்டோபர் 5 மற்றும் நவம்பர் 19க்கு இடையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்தியாவினால் முழுமையாக நடத்தப்படும் முதல் ஐசிசி உலகக் கோப்பை நிகழ்வாகும். இதற்காக இந்திய அணியும் தயாராகி வரும் நிலையில், உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த்துக்கு சிறப்பாக கிரிக்கெட் வாழ்கை சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தால் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த்:
கடந்த 2022ம் ஆண்டு டிச.30-ம் தேதி டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த், காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி பயங்கர விபத்தில் சிக்கினார். இந்த விபத்து உத்தரகாண்ட் ரூர்க்கி அருகே நடந்தது. இதில், கார் முழுவதும் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த பந்தை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர்.
சாலை விபத்தில் படுகாயமடைந்த பந்த், சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாற்றப்பட்டார். ரிஷப் பந்த்துக்கு விபத்தில் நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம், வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது, அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம், முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
வாய்ப்பு இழப்பு:
விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் ரிஷப் பந்தால் கிரிக்கெட் விளையாட முடியுமா என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தது. இதனால், கடந்த 5 மாதங்களாக காயம் காரணமாக ஓய்வில் உள்ளதால், ஐபிஎல் தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்.
மேலும், ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அதில் பங்கேற்கும் அளவுக்கு உடல் தகுதி பெறுவாரா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. இதனிடையே, ஐபிஎல் போட்டியை பார்க்க ரிஷப் பந்த் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். மேலும், அவரது உடல்நலம் தேறி வருவது குறித்தும், சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டும் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ரிஷப் பந்த்தை விரைவில் களத்தில் பார்க்கலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
நல்ல முன்னேற்றம்:
அதே போல், ரிஷப் பந்தின் உடல்நிலையில், எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றும், இதனால் மற்றொரு அறுவை சிகிச்சை அவருக்கு தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு கூறியுள்ளது மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது. இந்த நிலையில், 2023 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவாரா? என்பது குறித்து தகவலை பகிர்ந்துள்ளது பிசிசிஐ.
Happy NO MORE CRUTCHES Day!#RP17 pic.twitter.com/mYbd8OmXQx
— Rishabh Pant (@RishabhPant17) May 5, 2023
பிசிசிஐ அதிகாரி கூறுகையில், கடந்த டிசம்பரில் பயங்கர சாலை விபத்தில் சிக்கிய இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த், உடல் நலம் தேறி வருகிறார். பல காயங்களிலிருந்து அவர் எதிர்பார்த்ததை விட விரைவாக குணமடைந்து வருவதால், பந்த் இறுதியாக நன்றாக நடக்கவும் தொடங்கியுள்ளார். இதனால், எதிர்பார்த்ததை விட விரைவில் மீண்டும் விளையாடும் கட்டத்திற்கு ரிஷப் பந்த் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
2023 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் விளையாடுவாரா?
இந்திய இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ரிஷப் ரிஷப் பந்த்துக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் முன்னர் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பிசிசிஐ அதிகாரி இதுபோன்ற அனைத்து ஊகங்களையும் மறுத்துள்ளார், அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் முன்னதாகவே கிரிக்கெட் உலகில் மீண்டும் வர முடியும் என்று கூறினார். மற்றொரு அறுவை சிகிச்சை குறித்து மிகுந்த கவலை இருந்தது.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவர் கண்காணிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, அவரது முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது. இது அவருக்கு பெரிய ஊக்கம். அவரது மறுபிரவேசம் முதலில் எதிர்பார்த்ததை விட மிகவும் விரைவில் களத்தில் இறங்குவார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். ஊன்றுகோல் இல்லாமல் அவர் இப்போது அதிக நேரம் நடக்க முடிகிறது. அவரது மறுவாழ்வின் கவனம் இப்போது தன்னை வலுப்படுத்துவதில் உள்ளது. அவர் விரைவில் மீண்டும் விளையாடும் கட்டப் பயிற்சியில் இருக்க வேண்டும் என்றார்.
விரைவில் களத்திற்கு திரும்புவார்:
பந்த் சமீபத்தில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தனது மறுவாழ்வை தொடங்கியுள்ளார். அங்கு அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார். இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு தன்னை தயார்படுத்த, அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால், உலகக்கோப்பை தொடருக்கு முன்பே ரிஷப் பந்து முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிசிசிஐயும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதேபோல், ஊன்றுகோல் இல்லாமல் ரிஷப் பந்த் நடக்கிறார் என்றும் விரைவில் களத்திற்கு திரும்புவார் எனவும் மருத்துவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Rishabh Pant spotted at Mumbai Airport. He is recovering well from injury.#WTCFinal #MIvsLSG pic.twitter.com/vrU6LFi8IU
— Cricket With Abdullah ???? (@Abdullah__Neaz) May 24, 2023