வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ள நிலையில் இதில் 16 முறை சென்னை தான் வெற்றிபெற்றுள்ளது.

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே, முதலில் சென்னை அணி பேட்டிங் செய்கிறது.
பஞ்சாப் : பிரியான்ஷ் ஆர்யா, ஸ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ்(வ), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ ஜான்சன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
சென்னை : ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்எஸ் தோனி(w/c), நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா
இன்று நடைபெறும் இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டி என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், புள்ளி விவரப்பட்டியலில் 11 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், 2 வெற்றிகளுடன் சென்னை அணி 10-வது இடத்திலும் உள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றது என்றால் புள்ளி விவரப்பட்டியலில் முன்னேற வாய்ப்பு இருக்கிறது.
அதே சமயம் சென்னை கிட்டத்தட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில் இன்னும் இந்த போட்டியோடு சேர்த்து 5 போட்டிகள் தொடர்ச்சியாக வெற்றிபெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. அதைப்போல புள்ளி விவரப்பட்டியலில் சென்னைக்கு மேல் இருக்கும் அணிகள் தொடர்ச்சியாக தோல்வியும் அடையவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே சென்னை பிளே ஆப் செல்ல வாய்ப்பு இல்லை என்றால் வாய்ப்புகள் இல்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025