தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான்? இன்று கனடா அணியுடன் பலப்பரீட்சை ..!

PAKvCAN Preview

டி20I: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியாக பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாழ்வா? சாவா? போட்டியாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலோ இல்லை, இந்த போட்டி மழையால் நடைபெறாமல் போனாலோ, பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விடும்.

உலகக்கோப்பை தொடரில், ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த 2 அணிகளும், புள்ளிப்பட்டியலில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்து வருகிறது. அதிலும், அயலாந்து, பாகிஸ்தான் அணிகளும் எந்த ஒரு வெற்றியையும் பெறாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், இதே போல 1999-ம் ஆண்டும் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்து உலகக்கோப்பையை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அதே போல நிகழவேண்டும் என பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பரப்பில் இருந்து வருகின்றனர். இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் கடந்த 2 போட்டிகளையும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 அணிகளும் ஒரே ஒரு முறை தான் டி20 நேருக்கு நேர் விளையாடியுள்ளனர், அதிலும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, கனடா அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மோதவுள்ளது, இந்த போட்டியானது விறுவிறுப்பாக செல்லும என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்