முதல் வெற்றியை பதிவு செய்யுமா மும்பை? டெல்லி அணியுடன் பலப்பரீட்சை!
ஐபிஎல் 2024 : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமான பார்மில் இருக்கிறது என்றே கூறலாம்.
ஏனென்றால், இந்த ஆண்டு இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவே புள்ளி விவரப்பட்டியலிலும் மும்பை அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அதைப்போல, டெல்லி அணி 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது.
இதன் காரணமாக புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் போட்டியை இந்த இரண்டு அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கும் என கருத்தபடுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிகளும் களம் காண்கிறது.
நேருக்கு நேர்
இதற்கு முன்னதாக டெல்லி அணியும் மும்பை அணியும் 33 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது . அதில் 18 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் வெற்றிபெற்றுள்ளது. டெல்லி அணி 15 முறை மட்டுமே வெற்றிபெற்று இருக்கிறது. எனவே டெல்லி அணிக்கு எதிராக நேருக்கு நேர் வெற்றியில் மும்பை நல்ல பார்மில் இருந்து இருக்கிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ்
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஜெரால்ட் கோட்ஸி, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரிட் பும்ரா , குவேனா மபாகா. தாக்கம் துணை: நுவன் துஷார.
டெல்லி கேபிட்டல்ஸ்
ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல் , சுமித் குமார், ரசிக் தார் சலாம், அன்ரிச் நார்ட்ஜே , இஷாந்த் சர்மா, கலீல் அகமது. தாக்கம் துணை: அபிஷேக் போரல்.