டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்மித்தை முந்துவாரா கோலி?
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித்தைமுந்தி முதலிடம் பிடிப்பாரா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பலரும் இந்திய அணியை விமர்சித்தது. இதனால் அடுத்த நடைபெறவுள்ள போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி, இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடம் பிடிக்கவுள்ளார். அடிலெய்ட் டெஸ்ட் முதல் இன்னிங்சில் விராட் கோலி அற்புதமாக ஆடி, 74 ரன்களை எடுத்தார். தற்பொழுது கோலிக்கும் ஸ்மித்துக்கும் இடையே 13 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே அடுத்தடுத்து நடக்கும் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் கோலி அதிரடியாக ஆடினால் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது.