இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் – இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மைதானமான இதில் 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். இந்த போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதில் இந்திய அணியின் பந்துவீச்சை தாங்காமல் இங்கிலாந்து அணி, 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே அடித்தது. தற்பொழுது இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இதுவரை உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனியின் சாதனையை முறியடித்து, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை அடைவார்.
அதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த பட்டியலில் சச்சின், 100 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவரைதொடர்ந்து ரிக்கி பாண்டிங், 71 சத்தங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். 70 சதங்களுடன் கோலி, மூன்றாம் இடத்தில் இருக்கும் நிலையில், இன்னும் ஒரு சதம் அடித்தால் ரிக்கி பாண்டிங்கை முந்தி, கோலி இரண்டாம் இடத்தை பிடிப்பார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…