இந்தியா – இங்கிலாந்து இடையே ஒருநாள் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா கிங் கோலி?
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கியுள்ளார்கள். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தால் அதிக சதம் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைப்பார். இருவரும் 41 சதங்கள் அடித்து சமனில் இருக்கின்றனர்.
இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 111.5 சராசரியுடன் 231 ரன்கள் அடித்தார். குறிப்பாக, இறுதி டி-20 போட்டியில் 52 பந்துகளில் 80 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். தற்போது கோலி நல்ல பார்மில் இருப்பதால், இன்றைய போட்டியில் அவர் சதம் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை : தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம் போல தொடங்கியுள்ளது. இதில்…
அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென…
அகமதாபாத் : நேற்று, (மார்ச் 24) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது.…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும்…
அகமதாபாத் : நேற்று ஐபிஎல் ஆட்டத்தில் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.…